சென்னை, ஜூலை 2026 பத்தாம் வகுப்பு துணை தேர்வு 08.07.2026 அன்று தொடங்கி 15.07.2026 வரையிலும் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வினை மொத்தம் 74,592 தேர்வர்கள் 240 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். தேர்வுக்கட்டுப்பாட்டு அறை: 08.07.2026 அன்று தொடங்கி 15.07.2026 வரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெறும் பொருட்டு, மாணவர்கள் / தேர்வர்கள் / பொதுமக்கள் ஆகியோர் இவ்வலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கான (Control Room) கீழ்க்காண் கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை இக்கட்டுப்பாட்டு அறையானது 08.07.2026 முதல் 15.07.2026 அன்று வரை அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 08.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்படும். கைப்பேசி எண். 9498383075 / 9498383076 மின்னஞ்சல் முகவரி தேர்வு வினாத்தாள்கள் தொடர்பாக தேர்வு நாட்களில், அன்றைய தேர்வு குறித்த வினாத்தாள் குறித்த புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் /தேர்வர்கள் /பொதுமக்கள் dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/education-and-employment/class-10-supplementary-exam-date-announced-school-education-department




