கோவை, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவே ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:- வெளிநாட்டு மதுபானங்கள், ஏற்கெனவே மதுக்கடைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகின்றனரோ அதை கொடுக்க வேண்டியது கடமை. சட்டப்பேரவையிலேயே ஆன்லைன் முறை குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். டாஸ்மாக் கடைகளில் பணப் பரிவர்த்தனை இருக்கக் கூடாது என்பதற்காகவும், கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கவும் ஆன்லைன் விற்பனை நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சில மதுக் கடைகளில் சில பிராண்ட் மது வகைகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. ஆன்லைன் மூலம் எந்தெந்த கடையில் என்னென்ன மது வகைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் ஆர்டர் அமலுக்கு வந்த பிறகு 700 பேர் வரை ஆர்டர் செய்து மதுபானங்கள் பெற்றுள்ளனர். இதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதையும் கவனித்து வருகிறோம். கடந்த காலங்களில் இந்த துறையை சீர்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-liquor-sales-to-prevent-extra-charges-minister-vignesh




