முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்களை இங்கே பார்ப்போமா. Yuvan Shankar Raja இயக்குநர் ராம் - யுவன் கூட்டணி எப்போதுமே ஸ்பெஷல்! இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கும் யுவனே இசையமைத்திருக்கிறார். நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகிறது. அதுபோல, யுவன் - செல்வராகவன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் என்றும் எவர்கிரீன். செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி 2' படத்திற்கும் யுவனே இசையமைக்கிறார். அத்தோடு, 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் 'ஜாலியா இருந்த ஒருத்தன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெக்ஸ்லா' உள்ளீட்ட படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தில் ஜீவா, இவானா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'டெக்ஸ்லா' படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும், இயக்குநராக அறிமுகமாகும் சுஜித் என். சுப்ரமணியம் இயக்கும் 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' படத்திற்கும் யுவன் இசையமைக்கிறார். இதில் இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெய்ன் நடிகராக அறிமுகமாகிறார். அதோடு, பிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் உருவாகிவரும் 'பேங் பேங்' படத்திற்கும் யுவன் இசையமைத்து வருகிறார். Yuvan Shankar Raja மேலும், விக்ரம் பிரபுவின் 'சிட்டி ஆஃப் கோல்டு', பாபி சிம்ஹாவின் 'நான் வயலன்ஸ்', மாதவனின் 'அதிர்ஷ்டசாலி', கெளதம் கார்த்திக்கின் பெயரிடப்படாத படம் எனப் பரபரப்பான படவரிசை யுவன் கையில் இருக்கிறது. தமிழையும் தாண்டி, மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கும் 'பரிபாடி', தெலுங்கில் 'சவுண்ட் என்ஜினியர்' படங்களுக்கும் யுவன் இசையமைப்பாளராகக் கமிட்டாகியிருக்கிறார். 'பரிபடி' படத்தின் மூலமாக மல்லுவுட்டிக்குள் என்ட்ரி தருகிறார் யுவன். Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/yuvan-shankar-raja-upcoming-movies-lineup




