கோத்தகிரி, கோத்தகிரி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கடமானை வேட்டையாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடமான் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கக்குச்சி அருகே உள்ள கனாகம்பை வனப்பகுதியில் வனச்சரகர் ஜெயகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடமானின் தோல் கிடந்ததை வனத்துறையினர் பார்த்து ஆய்வு செய்தனர். இதில், மர்ம நபர்கள் கடமானை வேட்டையாடி விட்டு, அதன் இறைச்சியை கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணை இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை மாவட்டம் காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்த வேலு (வயது 36), சூர்யா (32), மாணிக்கம் (36), ஊட்டி கனாக்கம்பையை சேர்ந்த செந்தில்குமார் (45), விஸ்வநாதன் (38), சின்னதுரை (43) ஆகிய 6 பேர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடமானை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது. சிறை இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நேற்று வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, கத்தி மற்றும் கடமானின் தோல் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் வனத்துறையினர் நேற்று இரவு கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனத்துறை இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடமான், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட, மிக உயரிய பாதுகாப்பு கொண்ட விலங்காகும். இவற்றை வேட்டையாடுவது பிணையில் வெளிவர முடியாத கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வனவிலங்குகளை வேட்டையாடுவதோ அல்லது அவற்றின் இறைச்சியை வாங்குவதோ சட்டப்படி குற்றம். எனவே, யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/6-arrested-for-hunting-deer-country-made-gun-seized




