கோவை, இந்தியாவின் முதல் சுதந்திர தின விழா அழைப்பிதழை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டு, வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். வரலாற்று பொக்கிஷம் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி விடுதலை பெற்றது. அன்று நாடு முழுவதும் சுதந்திர திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், 1947 ஆகஸ்ட் 15 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழாவின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி குறிப்பை வரலாற்று பொக்கிஷமாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நெகிழ்ச்சியான நினைவு "காலங்கள் பல கடந்தாலும், 79 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அரிய ஆவணம், அன்று நமது முன்னோர்கள் சுவாசித்த சுதந்திர காற்றின் உணர்வை இன்றும் நமக்கு கடத்துகிறது. சுதந்திர தின வாழ்த்து இந்த அரிய வரலாற்று பதிவை வெளியிட்டதோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் கே.சி.பழனிசாமி தெரிவித்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/1947-coimbatore-independence-day-invitation-released-by-kc-palanisami




