சென்னை, நீட் தேர்வையும், இ.டபிள்.எஸ் இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- நீட், இ.டபிள்.எஸ் இடஒதுக்கீட்டையும் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு மத்திய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது. தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்? கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, வீரமணி அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-says-the-teva-government-is-more-scared-of-the-protests-than-the-central-bjp-government




