திருவனந்தபுரம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அன்னக்கரா பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில், ராஜன்(வயது 75) என்ற முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கட்டப்பனை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியவர் ராஜன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கட்டப்பனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த வாகனம் இன்று அதிகாலை 5 மணியளவில் பரக்கடவு பகுதி அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவர் ராஜனுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் டிஜோ(வயது 45) காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆம்புலன்ஸில் பயணித்த உதவியாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜோயல் ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. வாகனத்தை ஓட்டும்போது ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பாக டிஜோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/kerala-ambulance-involved-in-accident-elderly-man-being-taken-for-treatment-dies




