செயின்ட் லூசியா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. செயின்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கேசி கார்டி அதிகபட்சமாக 50 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ஜமைக்கா வீரர் மேத்தீவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் கிமில் பூரன் 81 ரன்கள் குவித்து லூசியா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-saint-lucia-stun-jamaica-for-big-win




