ஐதராபாத், தெலுங்கானாவில் ஐ.டி. நிறுவன அலுவலகத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து மென்பொருள் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். மென்பொருள் என்ஜினீயர் பெங்களூரைச் சேர்ந்தவரான வி.அவினாஷ் (வயது 40) ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு முன் மென்பொருள் என்ஜினீயராக பணியில் சேர்ந்திருந்தார். சம்பவத்தன்று மாலை அவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பாததால் குடும்பத்தினர் அலுவலகத்துக்கு போன் செய்து, தேடினர். 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை அப்போது அலுவலகத்தின் பின்புறத்தில் ரத்த வெள்ளத்தில் அவினாஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் அவர் 4-வது மாடியில் இருந்து குதித்த காட்சி பதிவாகியுள்ளது. அவினாஷ் சைபர் மோசடியில் ரூ.2 லட்சம் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு இது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவினாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/cyber-fraud-it-engineer-commits-suicide-by-jumping-from-4th-floor-of-office




