கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. Dorothy Movie Poster இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ரிஷிகாந்த், "'டோரதி' படம் இப்போ செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. முதல்ல கார்த்திக் சுப்புராஜ் அண்ணனுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். இவ்வளவு பெரிய பொறுப்பை என்னை நம்பி எப்படி கொடுத்தீங்கன்னு தெரியல. கார்த்தி அண்ணன் மாதிரி ஒருத்தரைப் பார்த்துதான் 'நாமளும் சினிமாவுக்குள்ள வரலாம்' என்கிற நம்பிக்கையே எனக்கு வந்துச்சு. அவருக்கு நான் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன். அதைத் தீர்ப்பதற்கு முதல் படியாக இந்த 'டோரதி' படத்தை நான் நினைச்சுக்கிறேன்" என்றவர், 'டோரதி' படத்தின் வாய்ப்பு குறித்து, "திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு கதை சொல்லி, நீ பண்ணனும்னு சொன்னாரு. எல்லாம் ஃபைனல் ஆனதுக்கு அப்புறம் படத்தோட பணிகளுக்காக எங்களை மதுரைக்கு அனுப்பி வச்சாரு. 'மதுரையில போய் ரெண்டு மாசம் ஊர் எல்லாம் சுத்திப் பாருங்க'ன்னு சொன்னாரு. படம் ஆரம்பிக்கக்கூடிய நேரத்துல அவருக்கு கடுமையான பிரஷர் இருந்தது. ஆனாலும் எங்களை 'ஜிகர்தண்டா' படத்துல வர்ற மாதிரி ஒரு முறையான பயிற்சிக்காக அனுப்பி வச்சாரு. ஆரம்பத்துல நாங்க சரியா பண்ணாம தடுமாறினப்போ கூட, பெரியவங்க குட்டி பசங்களை திட்டவும் முடியாம அடிக்கவும் முடியாம பொறுமையா இருப்பாங்களே, அந்த மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு, 'சரிடா உங்களுக்கு என்னதான் வேணும்?'னு கேட்டு, பக்கத்துல உட்கார்ந்து கதையை விளக்கினாரு. Rishikanth - Modha Rathiri நடிகர்களாக எங்களை முழுமையாகத் தயார்படுத்தினார். எங்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகள் அவரையே சேரும். ஒரு உண்மை சொல்லணும்னா. 'மொத ராத்திரி' படத்துக்கு முன்னாடி நான் நடிச்ச முதல் படம் இந்த 'டோரதி'தான். ரெண்டு படத்துக்கும் ஒரே நாள்லதான் ஆபீஸ் போட்டாங்க. 'டோரதி' நடிச்சு முடிச்சு, கார்த்திக் சுப்புராஜ் அண்ணன்கிட்ட டிரெய்ன் ஆகிட்டுதான் நான் 'மொத ராத்திரி' படத்துக்கே போனேன்" எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/dorothy-pre-release-event-rishikanth-speech-karthik-subbaraj




