பாட்னா, பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பீகார் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக பீகார் அரசின் சமூக வலைதள கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சமூக வலைதளங்களில் பீகார் மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடுவோருக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டால், ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல், ஒவ்வொரு ஒரு லட்சம் பார்வைகளுக்கும் ரூ.10,000 என, அதிகபட்சமாக ஒரு வீடியோவுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வீடியோவுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே ஊக்கத்தொகை பெற முடியும். இருப்பினும், வைரலாகும் அனைத்து வீடியோக்களுக்கும் பணம் வழங்கப்படாது எனவும், அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் உள்ளடக்கங்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள், சேனல்கள் ஆகியவை இதில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/incentives-for-those-releasing-videos-on-government-welfare-schemes-new-scheme-by-the-bihar-government




