பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசின் போர்ட் டி சில்சி நகரில் உள்ள சாலையில் பொதுமக்கள் இன்று நடந்து சென்றுகொண்டிருந்தனர். கத்திக்குத்து தாக்குதல் அப்போது, 2 கத்திகளுடன் வந்த நபர் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்கினார். இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கர்ப்பினி உள்பட 3 பெண்கள் (வயது 19,24,36) படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 3 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/pregnant-woman-among-three-stabbed-in-paris




