லண்டன், இந்த முறை விம்பிள்டன் மகளிர் பிரிவில் புதியவர் ஒருவர் மகுடம் சூடுவது உறுதியாகி விட்டது. கரோலினா முச்சோவா-பார்போரா கிரெஜ்சிகோவா 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா முன்னாள் சாம்பியனும் சக நாட்டவருமான பார்போரா கிரெஜ்சிகோவாவை எதிர்கொண்டார். கால்இறுதி பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கரோலினா முச்சோவா 7-5, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். புதிய முகம் கிரெஜ்சிகோவாவின் வெளியேற்றத்தின் மூலம் இந்த முறை விம்பிள்டன் மகளிர் பிரிவில் புதியவர் ஒருவர் மகுடம் சூடுவது உறுதியாகி விட்டது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சரிவில் இருந்து மீண்டு 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான இவா ஜோவிச்சை சாய்த்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/wimbledon-tennis-all-champions-out-a-new-face-set-to-lift-the-trophy-in-the-womens-category




