புதுடெல்லி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு காலதாமதமாக செலுத்தப்படும் தொகை குறித்த 65 வழக்குகளுக்கு குறைதீர்க்கும் மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- குறைதீர் மன்றம் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தெலங்கானா மாநில வர்த்தக துறை ஆணையரகம் ஏற்பாடு செய்திருந்த தாமத கட்டணங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்காக நிரந்தர குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தெலங்கானா மாநில அரசு இந்த குறைதீர் மன்றங்கள் வாயிலாக ரூ.8.29 கோடி மதிப்பிலான 65 காலதாமதக்கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த குறைதீர் மன்றத்தில் குறு, சிறு, நிறுவனங்கள், நுகர்வோர், பொது துறை நிறுவனங்கள், பிரச்சனைகளுக்கான மாற்று முறை தீர்வு அமைப்புகள், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பொருத்த வரை தாமதமாக செலுத்தப்படும் தொகை என்பது விலைப்பட்டியல் தொடர்பான தொகை மட்டுமல்ல. மாறாக, இது சம்பளம், மூல பொருட்களின் கொள்முதல், கடன்களை திருப்பி செலுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறுவதற்கான திறன் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சுமூகமாக தீர்வு காண்பதன் மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/msme-companies-delayed-payments-redressal-forum-solution




