கவினின் 10-வது திரைப்படம் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர பட்டாளம் ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டு படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ‘லப்பர் பந்து’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா கவின் ஜோடியாக ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் காமெடியில் அசத்தி வரும் பால சரவணனும் முக்கிய ரோலில் இணைந்துள்ளார். பிரின்ஸ் பிக்ஸர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, சென்னை மற்றும் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் கவின் மற்றும் சஞ்சனா சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைப்புக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம் 1987-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிளாசிக் திரைப்படமான ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தலைப்பு, இந்த புதிய படத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. பழைய படத்தின் டைட்டிலாக இருந்தாலும், இது முற்றிலும் தற்காலத்திற்கு ஏற்ற ஒரு புதிய மற்றும் சுவாரசியமான கிராமத்துக் கதைக் களம் கொண்ட திரைப்படம் என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் மேல் இருக்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. கவின்- சஞ்சனா ஜோடி ‘டாடா’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பால் மக்களின் பேராதரவையும் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அண்மையில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் தங்களின் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து வரும் இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால், திரையில் இவர்களது புதிய காம்போ மற்றும் புதிய கெமிஸ்ட்ரி எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே தற்போதே பலமடங்கு அதிகரித்து இவர்களது கூட்டணி மீதான எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kavins-per-sollum-pillai-film-shooting-update



