கடலூர், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சேந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் நடராஜன் (55 வயது). தொழிலாளி. இவரது மகள் லாவண்யா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் நடராஜன் மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்ற அவர் விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் நாகராஜ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில், விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-commits-suicide-by-consuming-poison-after-grieving-daughters-death




