ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ஈரோடு மாவட்டம், கோபி பகுதியில் கடந்த 14-10-2023 அன்று தியேட்டரில் திரைப்படத்தின் இடைவேளையின்போது கல்லூரி மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வாலிபருக்கு 4 ஆண்டு சிறை இதுதொடர்பான வழக்கில், கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சொர்ணகுமார், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-college-student-sexually-harassed-youth-gets-4-years-in-prison




