சென்னை, நடிகை சமந்தா, தனது கர்ப்ப காலத்திலும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெயிட் லிப்டிங் பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் எடை தூக்குவது மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்த்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிய பயிற்சிகள் அல்லது யோகாசனங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால், சமந்தா தனது கர்ப்ப காலத்திலும் வெயிட் லிப்டிங் மற்றும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங் மேற்கொண்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவரின் அனுமதியுடன் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சமந்தா, “நான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்ட்ரென்த் டிரெய்னிங் செய்து வருகிறேன். எனது மருத்துவரின் முன் அனுமதியுடனும், கர்ப்ப கால பயிற்சிகளில் சான்றிதழ் பெற்ற எனது பயிற்சியாளரின் வழிகாட்டுதலிலும் மட்டுமே இவற்றை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும், உடலமைப்பும் மாறுபடும் என்பதால், முறையான பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் தனது பயிற்சிகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா அறிவுறுத்தியுள்ளார். ரசிகர்கள் பாராட்டு கர்ப்ப காலத்திலும் தனது உடல்நலனில் கவனம் செலுத்தி வருவதுடன், உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வையும் சமந்தா ஏற்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. தயாரிப்பாளராகவும் வெற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிப்பாளராகவும் புதிய வெற்றியைப் பெற்றுள்ள சமந்தா, சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த ஆண்டின் இறுதியில் சமந்தா தாயாகவுள்ளதாக கூறப்படுகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/samantha-samanthas-workouts-during-pregnancy-advice-not-to-do-them-yourself-post-goes-viral




