நெல்லை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நடப்பு ஆண்டில் மாணவர்கள் நேரடி சேர்க்கை கடந்த 15-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கால அவகாசம் நீட்டிப்பு நெல்லை மாவட்டத்தில் 2026-2027-ம் ஆண்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான பேட்டை, ராதாபுரம், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை செய்வதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் இந்த ஐ.டி.ஐ.களில் சேர விரும்புபவர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் நேரில் சென்று நேரடி சேர்க்கையில் சேரலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற் பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம், ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரடியாக செலுத்தப்பட வேண்டும். உதவித் தொகை மேலும் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளரகளுக்கும் விலையில்லா சைக்கிள், கட்டணமில்லா பஸ் பயணச் சலுகை, ரெயில் பயண கட்டண சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750, சீருடை (தையற்கூலியுடன்), செருப்பு, பாடப்புத்தகங்கள், வரைபடகருவிகள் பயிற்சியாளர் அடையாள அட்டை, இவற்றுடன் தமிழ்ப் புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதவிர திசையன்விளையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி சேர்க்கை தற்போது தற்காலிகமாக இடையன்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் எதிர்புறம் உள்ள கால்டுவெல் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை நெல்லை கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-student-admissions-in-government-and-private-itis-extended-till-31st




