நியூயார்க், பிபா உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி கையில் ஏந்தி கொண்டாடியபோது அர்ஜென்டினா வீரர்கள் திரும்பி நின்று கொண்டது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை உண்டாக்கி உள்ளது. சாம்பியன் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 23-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, தனது 2-வது உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விமர்சனம் பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் கோப்பையை ஸ்பெயின் அணி கையில் ஏந்திய போது அர்ஜென்டினா வீரர்கள் திரும்பி நின்று கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும்நிலையில், வெற்றி பெற்ற அணியை பாராட்ட மனமில்லாமல் முதுகை காண்பித்து நின்றதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/argentina-players-turn-their-backs-on-spain-slammed-for-classless-act-during-trophy-presentation




