சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்த்துகள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-birthday-mk-stalin-wishes-him




