விந்தோக், 2வது ஒருநாள் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா 335-9 இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கானர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்தார். நமீபியா தரப்பில் அந்த அணியின் ஜாக் பிரெசல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா வெற்றி இதனை தொடர்ந்து 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா 41.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நமீபியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. நமீபியா தரப்பில் அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க வீரர் டுவான் யான்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-odi-south-africa-crushes-namibia




