Article complet
`பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாக' மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார். திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. துரை வைகோ இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டப்போது பேசிய வைகோ, " நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது. தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன. கடந்த, 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை. தனி சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. கூட்டணியில் நமக்கு அங்கீகாரம் இல்லை என தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். பனிகாலம் முடிந்தால் வசந்தகாலம் வரப்போகிறது. நமக்கும் பனிகாலம் முடிந்து வசந்தகாலம் வர போகிறது. நாம் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம். தொண்டர்கள் கவலைபட வேண்டாம். வைகோ இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும். தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம். நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது. எங்களுக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தது போன்ற அடிப்படையான பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous




