அமராவதி, ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜி.வீரபாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:- கொரோனா பாதிப்பு ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தீவிர உடல்நலப் பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் அச்சப்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப் பிடிக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/corona-outbreak-in-andhra-4-dead-12-under-treatment




