நாட்றம்பள்ளி, பலூன் ஊதியபோது அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலூன் தொண்டையில் சிக்கியது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி குமார் - சத்யா தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2 பேர் இரட்டை ஆண் குழந்தைகள் ஆவர். இந்நிலையில், குமார் மற்றும் சத்யா வழக்கம்போல் துணி வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலூன் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை உடனடியாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணை இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலூன் தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-while-blowing-up-a-balloon-6-year-old-boy-dies-after-it-gets-stuck-in-his-throat




