புதுடெல்லி, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர், தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற் காக மத்திய அரசு, வீட்டு உபயோக கியாஸ் நுகர்வோரை பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்துக்கு கட்டாயப்படுத்துகிறது. இந்த பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இது குறித்த தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தன இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. பலமுறை காலக்கெடுவையும் நீட்டித்தது. இந்த காலநீட்டிப்பின் பயனாக கடந்த 19-ந்தேதி நிலவரப்படி, 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோர். அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர், பயோமெட்ரிக் ஆதார் அங்கீகா ' ரத்தை முடித்து விட்டனர். இன்னும் 10 சதவீதம் பாக்கி உள்ளது. அவர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.வருகிற 1-ந் தேதிக்குள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காதவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் கிடையாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/no-subsidized-gas-cylinders-without-aadhaar-biometric-registration-oil-companies




