சியோல், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதும் ஆட்டம் தென்கொரியா தலைநகர் சியோலில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 367-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தஷினேஸ்வர், தரவரிசையில் 157-வது இடத்தில் இருக்கும் சூன்வூ குவோனை (தென்கொரியா) எதிர்கொள்கிறார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசை யில் 247-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், 549-வது இடத்தில் உள்ள ஹையோன் சுங்குடன் (தென்கொரியா) மோதுகிறார். நாளை நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி-நிக்கி போனச்சா (இந்தியா) இணை, தென்கொரியாவின் ஜிசுங் நாம்-உய்சுங் பார்க் ஜோடியை சந்திக்கிறது. மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்- சூன்வூ குவோன். தஷினேஸ்வர்-ஹையோன் சுங் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 8 அணிகள் இடையிலான இறுதிசுற்றுக்கு முன்னேறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/davis-cup-tennis-india-vs-south-korea-matchstarts-today




