சென்னை, தொடர்ச்சியாக ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்று வரும் மமிதா பைஜுவின் இந்த வெற்றி, மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "பிரேமலு" திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த "டியூட்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடிக்க மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய இரு திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. ரூ.100 கோடி கிளப்பில் ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ இந்த நிலையில், சமீபத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வெளியான மலையாளத் திரைப்படமான ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம் அந்தப் படத்தின் வெற்றியும் மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஒரே ஆண்டில் ஹாட்ரிக் சாதனை இதன் மூலம் ஒரே ஆண்டில் மமிதா பைஜு நடித்த 3 திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. இதனால், ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற ஹாட்ரிக் சாதனையை அவர் படைத்துள்ளார். தொடர்ச்சியாக ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்று வரும் மமிதா பைஜுவின் இந்த வெற்றி, மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் “MAMITHA BAIJU ERA” என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/hat-trick-hit-mamita-baiju-in-3-rs-100-crore-films-in-a-single-year



