ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குடியாத்தம் - வேலூர் சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 2 தந்தங்கள் இருந்தது. அதை கைப்பற்றிய வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். யானை தந்தங்கள் விசாரணையில், லத்தேரி அருகேயுள்ள பனமடங்கி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம், ஒடுகத்தூர் அருகேயுள்ள பாக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி மற்றும் கோவிந்தராஜ் எனத் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து தந்தங்களை பணம் கொடுத்து வாங்கி வந்ததாகவும், அது இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் எனவும் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வனத்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/3-arrested-for-smuggling-elephant-tusks-gudiyatham-forest-department-officials-conducting-intensive-interrogation




