லாகூர் பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டங்க் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடியை குறிவைத்து நேற்று இரவு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். அதேபோல் பயங்கரவாதிகள் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/suicide-attack-on-security-checkpost-in-khyber-pakhtunkhwa-27-dead




