சென்னை, சென்னை விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்காமல் ஏற்பட்ட சிரமம் குறித்து 'மெட்டி ஒலி' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை லதா ராவ் தனது அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். நடிகை லதா ராவ் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் பெண்களுக்கு அவசர தேவைக்காக நாப்கின் கிடைக்குமா என அவர் விசாரித்துள்ளார். ஆனால், பெண்கள் கழிப்பறையில் நாப்கின் வழங்கும் வசதி தற்போது செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லதா ராவ் சிரமம் இதனால் பதற்றமடைந்த லதா ராவ், 7-வது கேட் அருகே உள்ள மருந்தகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அப்போது அங்கு பணியாளர் யாரும் இல்லாததால் மேலும் சிரமத்திற்கு ஆளானார். விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதால் மன உளைச்சலுடன் காணப்பட்ட அவர், பின்னர் பணியாளர் வந்ததும் நாப்கின் வாங்கிக்கொண்டு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இந்த அனுபவத்தை பகிர்ந்துள்ள லதா ராவ், பெண்கள் வெளியில் செல்லும்போது தங்களது கைப்பையில் நாப்கின் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நாப்கின் வழங்கும் கருவிகள் இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பெண்கள் கழிப்பறையில் நாப்கின் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கருவிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்ததால், அந்த வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். எனினும், அவசர தேவைக்காக நாப்கின் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் 2 நிமிடங்களுக்குள் நாப்கின் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், சென்னை விமான நிலைய பெண்கள் கழிப்பறைகளில் புதிதாக 36 நாப்கின் வழங்கும் கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-problem-that-happened-during-the-flight-departure-tv-actress-struggled-to-find-a-napkin



