இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர் செஃல்பி எடுப்பதும், ஐடி கார்டு அணிந்திருப்பதும் போன்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இஷான் கிஷன் கடந்த 2017-ம் ஆண்டு தனது 18-வது வயதில், வளர்ந்து வரும் வீரராக இருந்தபோதே விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் ஆர்பிஐயில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டார். டி.ஒய். பாட்டீல் போன்ற புகழ்பெற்ற உள்நாட்டு தொடர்களில் ஆர்பிஐ அணிக்காக அவர் விளையாடியுள்ளார். இஷான் கிஷன் கிரிக்கெட் போட்டிகள் இல்லாத ஓய்வு நேரங்களில், அவர் வங்கிப் பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். ஆர்பிஐயில் கிரேடு ஏ பிரிவில் உள்ள உதவி மேலாளர் பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.49,000 வரை வழங்கப்படுகிறது. இதனுடன் இதர படிகள் மற்றும் சலுகைகள் சேரும் போது மொத்த சம்பளம் ரூ.90,000 முதல் ரூ.1,15,000 வரை உயர்கிறது. பிடித்தங்கள் போக, இஷான் கிஷனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.75,000 முதல் ரூ.90,000 வரை கையில் சம்பளமாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. SRH Vs CSK: "நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆனால்!"- வெற்றி குறித்து இஷான் கிஷன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://sports.vikatan.com/cricket/ishan-kishan-the-cricketer-works-as-a-government-bank-officer



