கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. மதுரை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியைப் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோவிந்த யாதவ் (35) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக மாற்று ஓட்டுநராக சந்திலால் (34) என்பவர் உடன் இருந்தார். திடீர் தீ விபத்து நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் லாரி சென்றபோது, சாலையின் மேலே சென்ற மின்கம்பியில் லாரி உரசியதாகத் தெரிகிறது. இதைக் கவனிக்காத ஓட்டுநர் லாரியை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் லாரி சென்ற நிலையில், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் லாரி தீப்பிடித்து எரிவதைக் கூறினர். விசாரணை உடனே ஓட்டுநரும், மாற்று ஓட்டுநரும் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தனர். அதற்குள் லாரி முழுமையாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். இருப்பினும், லாரி முழுவதுமாகத் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்தத் தீ விபத்தில் லாரியில் இருந்த தின்பண்டங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இவ்விபத்து குறித்துப் பேரிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishnagiri-snacks-lorry-catches-fire-two-survive




