மும்பை, மும்பை கடல் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக வெளிநாட்டு கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோராய் பகுதியில் உள்ள மனோரி கடற்கரை அருகே தரைதட்டியது. தரைதட்டிய கப்பல் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த கப்பலை, கடந்த ஒரு மாதமாக ஒரு கொள்ளை கும்பல் தொடர்ந்து குறிவைத்து உதிரிபாகங்களை திருடி வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அதிவேக விசைப்படகு மூலம் நடுக்கடலில் நின்ற அந்த கப்பலுக்கு சென்று, படகை ஓட்டி வந்த நபர் படகிலேயே காத்திருக்க, மீதமுள்ள 7 பேர் கப்பலுக்குள் ஏறியுள்ளனர். விஷவாயு அவர்களில் 4 பேர் கொண்ட குழுவினர். கப்பலின் உள்பகுதிக்கு சென்று அங்கிருந்த கியாஸ் பைப்பை கியாஸ் கட்டர் மூலம் வெட்டி திருட முயன்றனர். அப்போது, கப்பலின் மூடிய அறைக்குள் எதிர்பாராதவிதமாக பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் அறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்த 4 பேரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் 30 வயதிற்கு உட்பட்ட வாலிபர்கள் ஆவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/four-people-died-while-trying-to-steal-from-a-ship-that-ran-aground-in-the-mumbai-sea-area




