சென்னை, திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பெரிய அளவில் மோசடி நடைபெற்றது உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியும், தி.மு.க பிரமுகருமான அரசகுமார் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் கூட்டாளிகள் 2 பேரும் கைதானார்கள். அதிரடி சோதனை இந்த நிலையில் அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். சென்னை மற்றும் திருச்சியில் நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டது. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு பணம் வசூலிக்கப் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து அவர் மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சம்மன் இந்த நிலையில் அன்பில் மகேசுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் நாளை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்று அன்பில் மகேஷ் நாளை விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவரிடம் தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரத்துக்காக பணம் வசூல் செய்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பெறப்படுகிறது. ரூ.100 கோடி லஞ்ச ஊழல் வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வேகம் காட்டி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/fraudulently-claiming-to-get-recognition-for-private-schools-anbil-mahesh-ordered-to-appear-tomorrow




