ராணிப்பேட்டை, சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை 22 நாட்களுக்கு சேவை நிறுத்தப்படுகிறது. சோளிங்கரில் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் ஸ்ரீயோகஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இந்தநிலையில், இதில் பெரிய மலைக்கு செல்ல படிகள் செங்குத்தாக இருப்பதால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்துசமய அறநிலையத்துறையினர் ரோப்கார் அமைத்துள்ளனர். இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி மலை ஏற முடியாதவர்கள் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை 22 நாட்களுக்கு சேவை நிறுத்தப்படுகிறது. செப்டம்பர் 10ம் தேதி முதல் வழக்கம்போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் வழக்கம்போல் படிகள் வழியே செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/ranipet-cholingar-rope-car-service-suspended-for-22-days




