புதுடெல்லி, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் உரிய காலத்துக்குள் நிர்வாகிகள் தேர்தலை நடத்தவில்லை. அத்துடன் அதன் நிர்வாக செயல்பாடுகள் வெளிப்படைதன்மை கொண்டதாக இல்லை என்பது உள்பட பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது. இதற்கு இந்திய டேபிள் டென்னிஸ் சம் மேளனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் அதன் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுகொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/recognition-of-table-tennis-federation-of-india-revoked




