ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாகக் கடத்தி வரப்பட்ட 5 கிலோ உயர்தர ஹெராயினை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு(LoC) அருகே ஹவேலி தாலுகாவில் அமைந்துள்ள கோசல்யா என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்துள்ளனர். எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட அந்த ஹெராயின், ஒரு திட்டமிட்ட போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது. அந்த முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/narcotics-worth-rs-25-crore-and-weighing-5-kg-seized-along-the-kashmir-border




