‘ரேபிட்’ பிரிவில் கடைசி இறுதி சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 10 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முதலில் ரேபிட் பிரிவு பந்தயங்கள் நடந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய கிராண்ட்ஸ் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலில் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் (நெதர்லாந்து) வீழ்ந்தார். மற்ற 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது. ‘ரேபிட்’ பிரிவில் கடைசி இறுதி சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) 11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ (அமெரிக்கா) 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், லெய்னர் டோமினிகஸ் (அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து), லெவோன் அரோனியன் (அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) தலா 9 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 7 இடங்களிலும், பாபியானோ கருனா (அமெரிக்கா), ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) தலா 8 புள்ளிகளுடன் முறையே 8-வது, 9-வது இடத்திலும், அவோன்டர் லியோங் (அமெரிக்கா) 5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்று பந்தயங்கள் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/r-praggnanandhaa-tops-st-louis-rapid-takes-big-step-towards-grand-chess-tour-finals




