சென்னை, சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம். மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம்! வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-ondiveeran-endure-forever-in-the-history-of-the-tamil-people-chief-minister-vijay




