ராமநாதபுரம், சுமார் 3 மணி நேர தாமதமாக நள்ளிரவு 12.40 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து தினமும் இரவு 8.50 மணிக்கு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும். அதன் படி நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலானது ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை என்ற இடத்தில் வந்தபோது திடீரென என்ஜின் பழுதாகியது. இதனால் நடுவழியில் ரெயில் நின்றது. பயணிகள் கடும் அவதி இதைத்தொடர்ந்து ராமேசுவரத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப் பட்டது. பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சேது எக்ஸ்பிரஸ் ரெயில், அப்பகுதியில் இருந்து சுமார் 3 மணி நேர தாமதமாக நள்ளிரவு 12.40 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அதில் பயணித்த பய ணிகள் கடும் அவதி அடைந்தனர். சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதத்தால் ராமேசுவரத்தில் இருந்து இரவு 10.10 மணியளவில் பஞ்சாப் மாநிலம் பரஸ்பூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 12.05 மணியள வில் ராமேசுவரத்தில் இருந்து சென்றது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sethu-express-train-stalled-mid-journey-due-to-engine-failure-passengers-face-hardship




