தென்காசி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. தீ விபத்து இங்கு மாவட்டம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டிருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் நெல் மூடைகள் தனித்தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூடைகள் சேதமடைந்தன. அமைச்சர் ஆய்வு இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட ஆலங்குளம் ஐந்தாம் கட்டளை அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உடன் இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/food-minister-inspects-alangulam-government-paddy-procurement-centre-after-fire-accident




