திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. 8 பேர் பலி அந்த வகையில் கடந்த 7ம் தேதி வயநாடு மாவட்டம் கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஈடுபட்டு வந்தது. அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். பிரியங்கா காந்தி ஆறுதல் இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இன்று நேரில் சந்தித்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கன்னூர் வந்த பிரியங்கா காந்தி பின்னர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/priyanka-gandhi-visits-wayanad-landslide-site-meets-survivors




