நார்வேயில் நள்ளிரவிலும் முற்றிலும் 'நம்பிக்கையின்' அடிப்படையில் இயங்கும் பூக்கடை, தற்போது இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாலையானதும் கடையின் ஊழியர்கள் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். இருப்பினும், அந்தப் பூக்கடை அதன் வண்ணமயமான பூந்தொட்டிகள் மற்றும் செடிகளுடன், அவ்வழியே செல் லும் வாடிக்கையாளர்களுக்காக நடைபாதையிலேயே திறந்திருக்கிறது. அங்கிருந்து செடிகளை வாங்க விரும்பும் எவரும், தங்களுக்குப் பிடித்தமான தொட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர், கடையின் வாசலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையின் அடிப்படையில், அங்குள்ள தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறை யில் பணத்தைச் செலுத்தினால் போதும். இந்தக் காணொளியைக் கண்ட பலரும் நார்வே நாட்டு மக்களிடையே நிலவும் பொது நம்பிக்கையையும், அவர்களின் பொறுப்புணர்வையும் பாராட்டி வருகின்றனர். இத்தகைய தனித்துவமான பரஸ்பர நம்பிக்கை மற்றும் கலாசாரத்தின் காரணமாகவே, உலகளாவிய மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிப் பட்டியலில் நார்வே நாடு தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. 'மக்கள் சட்டத்தை மதித்து, ஒருவரையொருவர் நேசித்து, மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டால். உலகெங்கும் இது சாத்தியமே!' என்று இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/norways-hope-flower-shop



