‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டி நடிக்கிறார். உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்குகிறார். திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைக்கிறார். தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்னைகளில் இருந்து, பேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இந்த நிலையில் ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. படம் மீதான எதிர்பார்ப்பை இந்த பர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/tarun-vijays-master-plan-film-first-look-poster-out




