உடுமலை. படிக்க சென்ற இடத்தில், தைவான் நாட்டு பெண்ணை காதலித்து ஏமாற்றிய தாக தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் மலர்ந்த காதல் 'காதல்' என்ற ஒற்றை வார்த்தையில், ஒட்டுமொத்த உலகமே உழன்று கொண்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, நாடு பாகுபாடின்றி மலர்ந்த சிலரது காதல், திருமணம் என்ற மாலை சூடி மணம் வீசுகிறது. ஆனால் பலருக்கு காதல் என்ற பூ. வாசம் இழந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. அப்படி தான் இங்கே ஒரு காதல், தைவான் நாட்டில் படிக்க சென்ற இடத்தில் மலர்ந்த காதல் பாதியிலேயே கருகியது. தற்போது போலீஸ் நிலையத்தின் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து, காதலனை கம்பி எண்ண வைத்திருக்கிறது அந்த காதல். இதுபற்றிய விவரம் வருமாறு:- இந்தியரை திருமணம் செய்ய விரும்பிய தைவான் பெண் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் ஜெகதீஷ் (வயது 32), எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், தத்துவவியல் துறையில் முனைவர் பட்டம் பெற கடந்த 2023-ம் ஆண்டு தைவான் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரத்தைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்தியரைத் திருமணம் செய்ய விரும்பிய ஜோயிங்யிங்குக்கு ஜெகதீசுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. முனைவர் பட்டம் பெற்றதும் திருமணம் செய்வதாக ஜெகதீஷ் உறுதியளித்ததை நம்பி, அவரது படிப்புச் செலவுகள். தங்கும் வசதிகள் மற்றும் அன்றாடத் தேவைகளை ஜோயிங்யிங் கவனித்துக் கொண்டார். தனது பெற்றோரிடம் ஜெக தீஷை அறிமுகப்படுத்தியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் அந்தப் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வசித்து வந்தனர். தொடர்பு துண்டிப்பு சில மாதங்களுக்கு முன்பு முனைவர் படிப்பை முடித்த ஜெகதீஷ், இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் கூறிவிட்டு வந்து திருமணம் செய்வதாகக் கூறி ஊருக்குத் திரும்பினார். ஆரம்பத்தில் செல்போனில் பேசி வந்த அவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜோயிங்யிங்குடனான தொடர்பை திடீரெனத் துண்டித்தார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண். ஆன்லைன் மூலம் உடுமலை வக்கீல் சரஸ்வதியைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றார். வக்கீலின் அறிவுரைப்படி, தைவானில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஜோயிங்யிங், அங்கிருந்து கார் மூலம் உடுமலை சென்றடைந்தார். பின்னர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு, தைவானில் தன்னைத் தாக்கியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெகதீசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். கைது விசாரணைக்குப் பிறகு ஜோயிங்யிங்கை ஏமாற்றியது உறுதியானதால், உடுமலை போலீசார் ஜெகதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜோயிங்யிங் மருத்துவப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/taiwanese-woman-complains-about-plane-crash-in-tears




