சமந்தாவின்‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் 20 நாட்களில் ரூ.97 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது. அதிரடி கதாபாத்திரத்தில் மிரட்டும் சமந்தா இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் சமந்தாவின் வெற்றிகரமான மீள்வருகை படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. படத்தின் வசூல் விவரம் இந்த நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் 20 நாட்களில் ரூ.97 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. grosses 96. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/samanthas-maa-inti-bangaram-nears-rs-100-crore-worldwide




