சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். உழவர் ஏஐ உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:- "சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர்" என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு (Machine Learning) உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும். ரூ.2 கோடி ஒதுக்கீடு இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில், 2026-27 ஆம் ஆண்டில் "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்" செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/uzhavar-ai-scheme-launched-2-crore-allocated-in-the-agriculture-budget




