டோக்கியோ, ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் 46 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த 19ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற குல்வீர் சிங்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் இந்தியா பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. அதேவேளை, 98 தங்கம், 37 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 159 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-another-silver-for-india




