சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ‘குயிக் பைட்ஸ்" என்ற சிற்றுண்டியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- இந்த சிற்றுண்டியகத்தில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதிக்கு ஆன்மிக சுற்றுலா பயணம் 2024-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபற்றி ஆந்திர மாநில அரசு அதிகாரிகளிடம் பேசி மீண்டும் திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச்செல்ல பயணத்தை தொடங்கும்படி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். விரைவில் ஆந்திர அதிகாரிகளிடம் பேசி அந்த திட்டத்தை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ், தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால்தான் தமிழக சட்டசபையில் காவிரி விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. அரசியல் ரீதியாக பார்த்தால், தமிழ்நாடு தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக மாறிவிடும். மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை தலைவரான ராகுல்காந்தியின் நிலைப்பாடு பற்றி கேட்டால், காவிரி விவகாரத்தை மாநில அரசியலோடு மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-rajesh-kumar-assures-that-we-will-not-allow-the-dam-to-be-built-in-mekedatu




